தமிழக செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட போலீசாரை காப்பாற்ற முயல்வதா? சீமான் கண்டனம்

தூத்துக்குடி துப்பாக்கிசூட்டில் ஈடுபட்ட போலீசாரை காப்பாற்ற முயல்வதா? சீமான் கண்டனம்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கெதிரான போராட்டத்தில் மக்களை படுகொலை செய்த அதிகார வர்க்கத்தினர் மீது எவ்வித குற்றவியல் நடவடிக்கையும் எடுக்க முடியாதென தி.மு.க. அரசு கைவிரித்திருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

போராட்டத்தில் பங்கேற்ற மக்கள் காவல் துறையினரால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டதை அருணா ஜெகதீசன் ஆணையம் தோலுரித்து, சட்டரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைத்தும் அதனை செயல்படுத்த மறுக்கும் தி.மு.க. அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் மக்களை துள்ள துடிக்க பச்சை படுகொலை செய்திட்ட காவல் துறையினர் மீதும், ஏவிவிட்ட அதிகார வர்க்கத்தினர் மீதும், முந்தைய அரசின் ஆட்சியாளர்கள் மீதும் கொலை வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

அதனை செய்ய மறுத்து, மக்களை படுகொலை செய்தவர்களை சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்ற துணைபோனால் தி.மு.க. அரசு வரலாற்று பழியை சுமக்க நேரிடுமென எச்சரிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்