தமிழக செய்திகள்

பிறந்த பச்சிளம் குழந்தை விற்க முயற்சி... மதுரை அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிறந்த பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தினத்தந்தி

மதுரை,

மருத்துவமனை அருகே மூதாட்டி ஒருவர், கையில் பச்சிளம் குழந்தையுடன் நின்று கொண்டிருந்தார். இதனால் சந்தேகம் அடைந்த பேலீசார், அவரிடம் விசாரித்தனர். அப்பேது, தனது மகள் அழகு பாண்டி அம்மாளின் குழந்தை என கூறியுள்ளார்.

அவரது மகளிடம் விசாரித்தபேது பொய் என்பது தெரியவந்தது. குழந்தை யாருடையது என்பது குறித்து பேலீசார் விசாரித்து வரும் நிலையில், பச்சிளம் குழந்தையை விற்பனை செய்ய முயன்ற பாண்டியம்மாள், மாலதி உள்ளிட்ட 5 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் பேலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது