தமிழக செய்திகள்

சொட்டுநீர் பாசன குழாய்களை திருட முயன்றவர் கைது

தினத்தந்தி

ஊத்தங்கரை:-

கல்லாவி அருகே சொட்டுநீர் பாசன குழாய்களை திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

சொட்டுநீர் பாசன குழாய்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி அருகே புதூர் புங்கனையை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 24). விவசாயி. இவருடைய நிலம் ரேஷன் கடை அருகில் உள்ளது. இவரது நிலத்திற்கு வந்த 4 பேர், அங்கிருந்த சொட்டு நீர் பாசன குழாய்கள் 10 பண்டல்களை திருடி ஒரு ஆட்டோவில் ஏற்ற முயன்றனர்.

இதைக்கண்ட பிரபாகரன் சத்தம் போட்டபடியே அவர்களை பிடிக்க சென்றார். அப்போது ஒருவர் அவரிடம் சிக்கினார். மற்ற 3 பேர் தப்பி சென்றனர். பிடிபட்ட நபரை பிரபாகரன், கல்லாவி போலீசில் ஒப்படைத்தார்.

ஒருவர் கைது

அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பிடிபட்டவர் பெயர் பழனி (42) என்பதும், சிங்காரப்பேட்டையை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர். கைதானவர் ஆட்டோவில் ஏற்றிய 4 ஆயிரம் மீட்டர் சொட்டுநீர் பாசன குழாய்கள் 10 பண்டல்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.38 ஆயிரம் என கூறப்படுகிறது.

மேலும் தப்பி சென்றது புங்கை கோகுல் (20), சுவேதன் (20), விஜயராகவன் (20) என்பது தெரிய வந்தது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்