தமிழக செய்திகள்

டிடிவி தினகரன் தனிக்கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பம்

டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்குவாரா மாட்டாரா என்பது குறித்து அவரது ஆதரவாளர்கள் மத்தியிலேயே குழப்பம் நிலவி வருகிறது.#TTVDinakaran #NewParty

சென்னை

தனிக்கட்சி துவங்க போவதாகவும், அது குறித்த அறிவிப்பை எம்ஜிஆரின் பிறந்த நாளில் வெளியிட உள்ளதாகவும் எம்எல்ஏ தினகரன் முன்பு அறிவித்திருந்தார். ஆனால் எம்ஜிஆர் பிறந்தநாளில் செய்தியாளர்களை சந்தித்த தினகரன், புதிய கட்சி துவங்குவதற்கான சூழல் தற்போது இல்லை என்றார்.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரனின் நெருங்கிய ஆதரவாளரான தங்க தமிழ்ச்செல்வன், தினகரன் தனிக்கட்சி துவங்க போவதாக கூறினார். ஆனால் எப்போது துவங்க போகிறார் என தெரியவில்லை. அப்படி அவர் தனிக்கட்சி துவங்கினாலும் நாங்கள் அதில் சேர மாட்டோம். நாங்கள் எப்போதும் அதிமுக கட்சியின் உறுப்பினர்கள் தான். எங்கள் பொதுச் செயலாளர் சசிகலா தான் என்றார்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறும் போது தினகரன் தனிக்கட்சி துவங்கினால் அவருக்கு தோளோடு தோள் கொடுப்பேன். அவரது தலைமையை ஏற்க தயாராக உள்ளேன் என்றார்.

இந்நிலையில் ஜெ., சிகிச்சை வீடியோ வெளியிட்ட வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் இன்று ஆஜராக வந்த வெற்றிவேல், தினகரன் கட்சி தொடங்கினால் வெளியில் இருந்து ஆதரவு தருவோம் என்றார்.

அது போல் புதுச்சேரியில் தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கூறும் போது டிடிவி தினகரன் தனிக்கட்சி தொடங்கமாட்டார் என கூறினார்.

தினகரனின் நெருங்கிய ஆதரவாளர்கள் ஒவ்வொருவரும் மாறுபட்ட கருத்தை முன்வைத்துள்ளனர்.

#Vetrivel #TTVDinakaran #NewParty

பெண்களுடன் தனிமையில் இருந்து வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கல்லூரி மாணவர் கைது

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு