தமிழக செய்திகள்

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் - தமிழக அரசுக்கு, டி.டி.வி.தினகரன் வலியுறுத்தல்

2019-ம் ஆண்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசுக்கு, டி.டி.வி.தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:-

பழைய ஓய்வூதிய திட்டத்தையே செயல்படுத்த வேண்டும் என்று கோரி போராடியபோது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் எடப்பாடி பழனிசாமி அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல்-அமைச்சரின் கோரிக்கையை ஏற்று போராட்டத்தைக் கைவிட்டு பணிக்கு திரும்பிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கத்தோடு அவர்கள் மீதான குற்ற குறிப்பாணைகளையும், வழக்குகளையும் கைவிடாமல் இருப்பது சரியானதல்ல.

இதனால் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பதவி உயர்வு, ஊதிய உயர்வு, பணி ஓய்வு, அதற்கு பிந்தைய பலன்கள் என எதையும் பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இப்பிரச்சினையில் தமிழக அரசு மனிதநேயத்துடனும், மனசாட்சியோடும் நடந்து கொள்ளவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்