தமிழக செய்திகள்

காசநோய் பாதிப்பு குறித்த ஆய்வு

வெண்ணந்தூர் ஒன்றிய பகுதியில் காசநோய் பாதிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தினத்தந்தி

நாமக்கல் மாவட்ட தேசிய காசநோய் ஒழிப்பு திட்டத்தின் சார்பில் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஓ.சவுதாபுரம் மற்றும் நாச்சிபட்டி பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காசநோய் பாதிப்பு அறிகுறிகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வின்போது முதல்-அமைச்சரால் வழங்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி மூலம் சளி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வில் நாமக்கல் மாவட்ட காசநோய் துறை துணை இயக்குனர் டாக்டர் வாசுதேவன், ஓ.சவுதாபுரம் வட்டார மருத்துவ அலுவலர் மனோகரன், டாக்டர் ஏகலைவன், மாவட்ட நல கல்வியாளர் ராமச்சந்திரன், முதுநிலை காசநோய் மேற்பார்வையாளர் சதீஷ்குமார் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது