தமிழக செய்திகள்

தப்பியோடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைவு

தப்பியோடிய 2 பேரை பிடிக்க தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்துள்ளனர்.

தினத்தந்தி

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அருகே அம்மாசத்திரம் பகுதியில் சரக்கு வேனை போலீசார் சோதனை செய்த போது காய்கறி மூட்டைகளில் மறைத்து கடத்திவரப்பட்ட 409 கிலோ கஞ்சா பண்டல்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக புதுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா பண்டல்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. மேலும் சரக்கு வேனில் கஞ்சாவை கடத்தி வந்த டிரைவர் மற்றும் மற்றொருவர் தப்பியோடிய நிலையில், அவர்களை பற்றி போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் சிப்பிக்குளம் கீழ வைப்பாறு ஸ்ரீ வைகுண்ட பெருமாள்புரத்தை சேர்ந்த ரமேஷ் (வயது 24), தூத்துக்குடி சிப்பிக்குளம் குளத்தூர் கிழக்கு பகுதியை சேர்ந்த ஸ்டார்வின் (38) ஆகியோர் என தெரியவந்தது. தப்பியோடிய 2 பேரையும் பிடிக்க புதுக்கோட்டை தனிப்படை போலீசார் தூத்துக்குடி விரைந்துள்ளனர். மேலும் கஞ்சாவை ஆந்திராவில் யாரிடம் இருந்து வாங்கி, யாருக்காக கடத்தி வந்தனர், இதன் பின்னணியில் யார்? யார்? உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு