தமிழக செய்திகள்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறைந்ததா? - அதிகாரி விளக்கம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி இருப்பு குறைந்ததா? என்பதற்கு அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனல் மின்நிலையத்தில் 210 மெகாவாட் மின்சார உற்பத்தி திறன் கொண்ட 5 மின்உற்பத்தி எந்திரங்கள் உள்ளன. இதில் 2-வது மின்சார உற்பத்தி எந்திரத்தில் உள்ள கொதிகலன் குழாயில் நேற்று முன்தினம் பழுது ஏற்பட்டது. இதனால் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அனல்மின்நிலைய அதிகாரிகள் பழுதுநீக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், வடசென்னை அனல்மின்நிலையத்தில் 2.38 லட்சம் நிலக்கரி காணாமல் போய் இருப்பதாக அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்கனவே தெரிவித்து இருந்தார். மேலும் தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின்நிலையங்களிலும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்து இருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் உள்ள 5 மின்உற்பத்தி எந்திரங்களும் முழுவீச்சில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு ஒரு நாளைக்கு 15 ஆயிரம் முதல் 18 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது.

இந்த நிலக்கரி அனல் மின்நிலைய வளாகத்தில் உள்ள யார்டில் சேகரித்து வைக்கப்படுகிறது. அதன்படி, தற்போது சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி கையிருப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த அளவை விட 50 சதவீதம் குறைவாக நிலக்கரி இருப்பு வைக்கப்பட்டு இருப்பதாகவும் அதிகாரிகள் சிலர் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில் அனல் மின்நிலைய உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, தூத்துக்குடி அனல்மின்நிலையத்தில் நிலக்கரி இருப்பு சரியாக உள்ளதாகவும், தவறான தகவல்கள் வெளியாகி இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்