சென்னை போரூரை சேர்ந்தவர் ஆனந்தி, சின்னத்திரை தொடர்களிலும், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
இவரது கணவர் நடனக்கலைஞராவார், கந்துவட்டி கொடுமை குறித்து பேசிய ஆனந்தி, எங்கள் சொந்தக்காரர் ஒருவரிடம் ரூ.5 லட்சத்தை கடனாக பெற்றோம், இதற்காக ரூ.1.80 லட்சம் வரை வட்டியும் கட்டிவிட்டோம். ஆனால் நான் கையெழுத்திட்ட காலியான வங்கி காசோலையை பயன்படுத்தி கடன் தொகை ரூ.30 லட்சம் என போட்டுக் கொண்டார்கள். வீட்டை எழுதி தருமாறு மிரட்டுகின்றனர், முகத்தில் ஆசிட் வீசி விடுவதாகவும் பயமுறுத்துகின்றனர். இது தொடர்பாக ராணிப்பேட்டை போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் சென்னை கமிஷனர் அலுவலகத்தில், முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார் கொடுக்க உள்ளேன் என தெரிவித்தார்.
அதன்படி இன்று நடிகை ஆனந்தி காவல் ஆணையர் அலுவலகத்தில் கந்துவட்டி புகார் அளித்தார்.