தமிழக செய்திகள்

படிக்காமல் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் படிக்காமல் டி.வி. பார்த்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தை சேர்ந்தவர் ஹரிதா (வயது 16). இவர், தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர், நேற்று முன்தினம் இரவு தனக்கு பிடித்தமான நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்து கொண்டிருந்தார்.

அப்போது படிக்காமல் இப்படி டி.வி. பார்த்துக் கொண்டிருக்கிறாயே? என அவரது பெற்றோர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி, தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் எழுந்த அவரது பெற்றோர், மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு கதறி துடித்தனர். இதுபற்றி பள்ளிக்கரணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து