தமிழக செய்திகள்

திருவள்ளூரில் வாக்குசேகரிப்பில் ஈடுபடும் தவெக தலைவர் விஜய்

தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

திருவள்ளூர்,

தமிழக சட்டசபை தேர்தல் வரும் வியாழக்கிழமை நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் விஜய் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சாலையில் வாகனத்தில் நகர்வலமாக சென்று விஜய் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விஜய்க்கு சாலையின் இருபுறமும் திரண்டு தவெக தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.