தமிழக செய்திகள்

சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழப்பு..!

சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

தினத்தந்தி

ஆவடி,

சென்னை ஆவடி மத்திய அரசின் ஓ.சி.எப் தொழிற்சாலை குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டிக்குள் மோசஸ் (45), தேவன் (46) இரு தொழிலாளர்கள் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது திடீரென விஷவாயு தாக்கியதில் இரு தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்த வந்த போலிசார் இருவரின் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவரும் ஓ.சி.எப் தொழிற்சாலையில் ஒப்பந்த தூய்மை பணியாளர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இரு தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்