தமிழக செய்திகள்

கரூர்: பெண்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இரு இளைஞர்கள் கைது..!

கரூர் அருகே ரோட்டில் நடந்து சென்ற பெண்களிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த இரு வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் தளவாபாளையம் அருகே கிழக்கு தவிட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜானகிராமன். இவரது மகள் கலைமகள் (31) . இவர் இறந்து போன அப்பாவுக்கு சாமி கும்பிட்டு விட்டு பின்னர் கழிப்பதற்காக கிழக்கு தவிட்டுப்பாளையம் மேற்கு துறை பகுதிக்கு அவர்களது உறவினர்களுடன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் இளவரசன் (31) ,மாரிமுத்து மகன் அறிவழகன்( 25) ஆகிய இருவரும் கலைமகளின் உறவினர்களைப் பார்த்து தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளனர். பின்னர் அவர்களது உறவினர்களான சஸ்விதா, ஹேமதர்ஷினி ஆகிய இருவரையும் இளவரசன் கையை பிடித்து இழுத்ததாகவும் அதைக்கேட்ட சுரேஷ் என்பவரை அறிவழகன் அவரது கன்னத்தில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பின்னர் இரு பெண்களையும் பார்த்து பார்த்து கொலை மிரட்டல் விட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து கலைமகள் வேலாயுதம்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளவரசன் மற்றும் அறிவழகன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். பின்னர் கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மனைவிக்கு பதிலாக கணவருக்கு இறப்பு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள்

ஒரேநாளில் 18 கேள்விகளுக்கு பதில் மக்களவையில் கேள்வி நேரத்தை வேகப்படுத்திய சபாநாயகர் ஓம் பிர்லா

ஆந்திராவில் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

அரசு ஊழியர்கள் கதர் ஆடை அணிவது கட்டாயம் - கர்நாடக அரசு உத்தரவு

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்