தமிழக செய்திகள்

உ.வே.சாமிநாதரின் செம்பணி நன்றியோடு போற்றப்படும்: மு.க.ஸ்டாலின்

உ.வே.சாமிநாதரின் செம்பணி நன்றியோடு போற்றப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயரின் 171-வது பிறந்தநாளையொட்டி சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு கிழே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாமிநாதன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-

தொல்லியல் சான்றுகளால் இன்று நாம் மெய்ப்பித்து வரும் தமிழின் தொன்மையையும் பண்டைத் தமிழரின் வாழ்வியலையும் - பழந்தமிழ் இலக்கியங்கள் வழியே வெளிக்கொணர்ந்த 'தமிழ்த்தாத்தா' உ.வே.சாமிநாத ஐயரின் பிறந்தநாள் இன்று. மண்ணிலும் தீயிலும் மறைந்துபோகவிருந்த தமிழர் வரலாற்றுச் சுவடிகளைப் பதிப்பித்த அவரது செம்பணி தமிழுள்ளமட்டும் நன்றியோடு போற்றப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு