கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

யு.ஜி.சி நெட் தேர்வு ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம்

சிவில் சர்வீசஸ் தேர்வு காரணமாக யு.ஜி.சி நெட் தேர்வு வரும் ஜூன் 18-ந்தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சிவில் சர்வீசஸ் 2024-ம் ஆண்டுக்கான முதல் நிலை தேர்வு, வருகிற ஜூன் மாதம் 16-ந்தேதி நடைபெறுகிறது. அதேநாளில், கல்லூரி உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி. நெட் தேர்வும் நடைபெறும் என்று யு.ஜி.சி. அறிவித்திருந்தது.

சிவில் சர்வீசஸ் தேர்வுக்கும், யு.ஜி.சி நெட் தேர்வுக்கும் தயாராகி வந்த தேர்வர்களுக்கு, இது சிக்கலை ஏற்படுத்தியது. இதன்காரணமாக, யு.ஜி.சி நெட் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று தேர்வர்கள் யு.ஜி.சி.யிடம் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட யு.ஜி.சி., உதவி பேராசிரியர் பணிக்கான யு.ஜி.சி நெட் தேர்வு, ஜூன் 18-ந்தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து