தமிழக செய்திகள்

அதிமுக ஆட்சியில் காவல்துறை சுதந்திரமாக கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகிறது - அமைச்சர் சி.வி.சண்முகம்

அதிமுக ஆட்சியில் காவல்துறை சுயமாக, சுதந்திரமாக கட்டுப்பாட்டுடன் இயங்கி வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

சென்னை,

அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் சாத்தான்குளம் சம்பவம் குறித்த தனது அறிக்கையில் விமர்சனம் செய்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அதிமுக அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் விமர்சனத்திற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் சி.வி.சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். காழ்ப்புணர்ச்சியோடு ஸ்டாலின் வெளியிடும் அறிக்கை காவல்துறையினருக்கு மனச்சோர்வை தரும் என சி.வி.சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.

சட்டம் ஒழுங்கை பேணி காப்பதில் எந்த சமரசத்தையும் ஏற்றுக்கொள்ளாத இயக்கம் அதிமுக என்று தெரிவித்துள்ள அவர் அதிமுக ஆட்சியில் காவல்துறை சுயமாக, சுதந்திரமாக கட்டுப்பாட்டுடன் இயங்கி வருகிறது என்று கூறியுள்ளார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து