தமிழக செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண் பிணம்

கல்வராயன்மலையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. கொலையா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினத்தந்தி

கச்சிராயப்பாளையம்

கல்வராயன்மலை தரிசு காடு அருகே உள்ள நக்க வளவு செல்லும் ஒத்தையடி மலைப்பாதையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தெரியவில்லை? இதை பார்த்த அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் கரியாலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவரை யாரேனும் கொலை செய்து உடலை காட்டில் வீசி சென்றனரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை