செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தை அடுத்த தேன்பாக்கம் ஒட்டிய மலையடிவாரத்தில் உள்ள தைலமரக்காட்டில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். நீல நிற கட்டம் போட்ட லுங்கியும் வெள்ளை சட்டையும் அணிந்திருந்தார். இவர் இறந்து 10 நாட்கள் வரை ஆகியிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அச்சரப்பாக்கம் போலீசார் இறந்து கிடந்த முதியவர் உடலை பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது சம்பந்தமாக அச்சரப்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். இறந்த நபர் யார்? எதற்காக அங்கு சென்றார்? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.