தமிழக செய்திகள்

அடையாளம் தெரியாத ஆண்பிணம்

அடையாளம் தெரியாத ஆண்பிணம்

தினத்தந்தி

முத்துப்பேட்டை அருகே உள்ள அலையாத்திக்காடு பகுதியில் உள்ள கடல் முகத்துவாரம் கரையோரம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த பகுதியில் மீன்பிடித்து கொண்டு இருந்த மீனவர்கள் உடனடியாக முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் முத்துப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், கடலோர காவல் குழும சப்-இன்ஸ்பெக்டர் ரகுபதி மற்றும் போலீசார் படகு மூலம் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது சுமார் 48 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து போலீசார், பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் உதவியுடன் பிணத்தை மீட்டு படகு மூலம் ஜாம்புவானோடை படகு துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்