தமிழக செய்திகள்

150 தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, நலத்திட்ட உதவிகள்

150 தூய்மை பணியாளர்களுக்கு சீருடை, நலத்திட்ட உதவிகளை அமைச்சர் காந்தி வழங்கினார்.

தினத்தந்தி

சோளிங்கர்

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகராட்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாளை முன்னிட்டு 150 தூய்மைப் பணியாளருக்கு சீருடை, ஏழை எளிய மக்களுக்கு அரிசி, சேலை, கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சித் துணைத் தலைவர் பழனி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் பரந்தாமன் முன்னிலை வகித்தார். துப்புரவு ஆய்வாளர் வடிவேல், இளநிலை உதவியாளர் எபினேசன், ஜெயராமன் ஆகியோர் வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, ஜெகத்ரட்சகன் எம்.பி., மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு 150 தூய்மை பணியாளருக்கு சீருடை வழங்கினர். ஏழை எளிய மக்கள் 300 பேருக்கு 5 கிலோ அரிசி மற்றும் சேலை வழங்கினார்கள்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்