தமிழக செய்திகள்

24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் - முதலமைச்சரின் அறிவிப்புக்கு விவசாயிகள் நன்றி

24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ள்னர்.

தினத்தந்தி

சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தேர்தல் பிரசாரத்தில் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று அவர் திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அவினாசியில் பிரசாரத்தை தொடங்கிய அவர் திருப்பூர், காங்கயம், தாராபுரம், மடத்துக்குளம் என மாவட்டத்தின் பல பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். மேலும் இஸ்லாமியர்கள், விவசாயிகளையும் சந்தித்து பேசினார்.

காங்கயத்தில் நேற்று விவசாயிகள் கருத்துக்கேட்பு கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர், விவசாய பெருமக்கள் கலந்து கொண்டனர். அப்போது விவசாயிகள் பம்புசெட்டுக்கு மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் கோரிக்கையை ஏற்று விவசாயிகளின் நலனில் அக்கறை கொண்டு 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி இன்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில் 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற முதலமைச்சரின் அறிவிப்புக்கு டெல்டா பகுதி விவசாயிகள் தங்களது நன்றியை தெரிவித்துள்ள்னர்.

இது குறித்து செந்தில் விவசாயி கூறியாதாவது:-

24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்ற ஒரு அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார். இதனால் டெல்டா மாவட்ட விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சியில் இருக்கிறோம். இரண்டு போகம் விவசாயம் செய்த டெல்டா மாவட்ட விவசாயிகள் தற்போது மூன்று போகமும் விவசாயம் செய்யக்கூடிய வாய்ப்பை உருவாக்கிய முதலமைச்சருக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் சங்கம் சார்பில் நன்றிய தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐயப்பன் விவசாயி கூறியதாவது:-

12 மணிநேரம் மட்டுமே மின்சார்ம் வழங்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது 24 மணி நேரமும் விவசாயிகளின் பம்புசெட்டுக்கு தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை