தமிழக செய்திகள்

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம்

ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் நடைபெற்றது

தினத்தந்தி

இளையான்குடி

இளையான்குடி ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய தலைவர் முனியாண்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முத்துக்குமரன், ரஜினி தேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் இளங்கோவன் வரவேற்று பேசினார். கூட்டத்தில் வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தங்கள் பகுதிகளுக்குட்பட்ட குறைகள் குறித்து கவுன்சிலர்கள் விவாதம் செய்தனர். ஒன்றிய தலைவர் முனியாண்டி பேசும்போது, காவிரி கூட்டு குடிநீர் திட்ட அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வருகின்றனர் என்றார். மேலும் கவுன்சிலர்களின் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையாளர் முத்துக்குமரன் உறுதி அளித்தார். கூட்டத்தில் கூட்டுறவு சங்கத் தலைவர் கருஞ்சுத்தி ராஜா, கனகராஜா மற்றும் அரசு துறை அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய ஆரோக்கிய ரூபிலா நன்றி கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்