தமிழக செய்திகள்

தமிழில் 'ஒன்றியம்' என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன - கமல்ஹாசன் பேச்சு

விக்ரம் திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது நடிகர் கமல்ஹாசன் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

தினத்தந்தி

சென்னை,

கமல்ஹாசன் நடித்து கடைசியாக 2018-ல் விஸ்வரூபம் 2 படம் வெளியானது. நீண்ட இடைவெளிக்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள 'விக்ரம்' படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், விக்ரம்' திரைப்படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது:-

"4 வருடங்களாக என் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. 4 வருடங்கள் காத்திருக்க வைத்ததற்காக எனது அன்பான ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

விக்ரம்' படத்தின் அடுத்த பாகம் குறித்து லோகேஷ் கனகராஜ்தான் சொல்ல வேண்டும்; அதற்கும் இவர்தான் இயக்குநர் என நான் முடிவு செய்துவிட்டேன்.

தமிழில் 'ஒன்றியம்' என்பதற்கு பல அர்த்தங்கள் உள்ளன; வெவ்வேறாக புரிந்து கொண்டால் அது என் தவறில்லை. சினிமாவுல நான் பார்க்காத வேலையே இல்லை. நல்ல டீம் எனக்கு அமைந்து இருக்கிறது. நிச்சயம் விக்ரம் வெற்றி படமாக அமையும் " என்று கூறினார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை