தமிழக செய்திகள்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ஆம் தேதி தமிழகம் வருகை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இதில் பா.ஜ.க.வினர் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று சட்டசபையை அலங்கரிக்க வேண்டும் என்று அக்கட்சியினர் முனைப்பு காட்டி வருகின்றனர். எனவே, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தி மத்திய மந்திரிகள் அவ்வப்போது தமிழகத்துக்கு வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கடந்த இரு தினங்களுக்கு முன்பு புதுச்சேரி, காரைக்கால் மற்றும் விழுப்புரத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 7ஆம் தேதி மீண்டும் தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 7ஆம் தேதி தமிழகம் வரும் அமித்ஷா நாகர்கோவிலில் நடைபெற உள்ள பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்