தமிழக செய்திகள்

பாப்பம்மாள் பாட்டியிடம் ஆசி பெற்ற மத்திய மந்திரி பியூஸ்கோயல்

மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். அவருடன் மத்திய மந்திரி பியூஸ் கோயல், எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

தினத்தந்தி

மேட்டுப்பாளையம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நேற்று முன்தினம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொண்டார். அவருடன் மத்திய மந்திரி பியூஸ் கோயல், எல்.முருகன் ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த நிலையில் பாதயாத்திரையில் அண்ணாமலையை சந்திக்க இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த பத்மஸ்ரீ விருது பெற்ற 108 வயதான பாப்பம்மாள் பாட்டி வந்திருந்தார். இதனை அறிந்த அண்ணாமலை பாப்பம்மாள் பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றதுடன், அவருக்கு பொன்னாட அணிவித்து கவுரவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய மந்திரிகள் பியூஸ் கோயல், எல்.முருகன் ஆகியோரும் பாப்பம்மாள் பாட்டிக்கு பொன்னாடை அணிவித்து, அவரிடம் ஆசி பெற்று கொண்டனர்.

மத்திய மந்திரி பியூஸ் கோயல் பாப்பம்மாள் பாட்டியை சந்தித்து ஆசி பெற்றது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் கீதாயின் ஆசிகள் என்ற தலைப்பிட்டு இயற்கை விவசாயம் செய்து வரும் பாப்பம்மாள் பாட்டியை சந்தித்ததும், அவரின் ஆசி தனக்கும் கிடைத்ததும் மிக்க மகிழ்ச்சியான தருணமாகும் என குறிப்பிட்டுள்ளார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு