தமிழக செய்திகள்

துப்புரவு பணியாளர்களுடன் உணவருந்திய மத்திய மந்திரி எல்.முருகன்

மத்திய மந்திரி எல்.முருகன் 3 நாள் பயணமாக அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றார்.

தினத்தந்தி

சென்னை:

மத்திய மந்திரி எல்.முருகன் நிகோபாரில் உள்ள ஜங்லிகாட் துறைமுகத்தை பார்வையிட்டார். அப்போது ஆழ்கடலில் மீன்கள் அதிகம் கிடைக்கும் இடங்களை கண்டறியும் படகை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ஹாவ்லாக், கார் நிகோபார் தீவுகளில் 100 வாட் திறன் கொண்ட 2 பண்பலை வானொலி ஒலிபரப்பு நிலையம் தொடங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.

இதன்பின்பு போர்ட் பிளேர் புருஷா பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் துப்புரவு பணியாளர்களுடன் மதிய உணவு அருந்தினார். மேலும் போர்ட் பிளேரில் உள்ள செல்லுலார் சிறைச்சாலையை பார்வையிட்டார்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்