தமிழக செய்திகள்

மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தின் 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியது

மேட்டூர் பழைய அனல் மின் நிலையத்தின் 4-வது யூனிட்டில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

தினத்தந்தி

சேலம்,

மேட்டூர் பழைய அனல் மின் நிலையம் தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட4 யூனிட்டுகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 3-வது யூனிட்டில் ஏற்பட்ட விபத்து காரணமாக இந்த யூனிட்டில் நடைபெற்று வந்த 210 மெகாவாட் மின் உற்பத்தி தடைப்பட்டது.

இந்த நிலையில் 4-வது யூனிட்டில் 2 நாட்களுக்கு முன்பு கொதிகலன் குழாயில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக இந்த யூனிட்டில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு பழுதை சீரமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது இந்த பணி முடிவடைந்தது. இதையடுத்து 4-வது யூனிட்டிலும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அதாவது விபத்து ஏற்பட்ட 3-வது யூனிட் தவிர மற்ற 3 யூனிட்டுகளிலும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

அதாவது 840 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இந்த அனல் மின் நிலையத்தில் தற்போது 630 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து