தமிழக செய்திகள்

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம்: ஜெயலலிதாவுக்கு முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் பாராட்டு

பல்கலைக்கழக வேந்தராக முதல் -அமைச்சர் இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார்.

சென்னை,

ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;

இந்தியாவிலேயே இசைக்காக உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகம் இது. தமிழ்நாட்டில் முதல்-அமைச்சரே வேந்தராக இருக்கும் பல்கலைக்கழகம் இதுதான்

ஜெயலலிதா வேந்தராக தன்னையே நியமித்துக் கொண்டதை நான் மனதார பாராட்டுகிறேன். முதல்-அமைச்சர் வேந்தராக இருந்தால்தான் பல்கலைக்கழகம் நன்றாக இருக்கும் என்று முன்பே உணர்ந்தவர் ஜெயலலிதா. முதல்-அமைச்சர் பலகலைக்கழக வேந்தராக இருப்பதால் மக்கள் நினைப்பதை செய்ய முடிகிறது. பல்கலைக்கழகங்களுக்கு முதல்-அமைச்சர் வேந்தராக இருக்க வேண்டும் என்று சொல்வதற்கு காரணம் இதுதான். பல்கலைக்கழக வேந்தர் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் உள்ளது. நமது சட்ட போராட்டத்திற்கு நல்ல செய்தி வரும் என எதிர்பார்ப்போம்" என்றார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்