சென்னை,
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அந்த இரு நாட்களிலும் நடைபெற இருந்த அண்ணாமலை மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள் ஜனவரி 10, 11ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் 27 மற்றும் 30ம் தேதி நடைபெறவிருந்த தேர்வுகள், ஜனவரி 3 மற்றும் 4 ஆகிய தேதிகளுக்கு மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.