தமிழக செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு: தமிழ்நாட்டில் இருந்து தேர்வாகியுள்ள 60 பேருக்கும் என் பாராட்டுகள் - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் சமூகநீதிப் பார்வையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா: தமிழ்நாட்டின் சமூகநீதிப் பார்வையை இந்தியா முழுவதும் கொண்டு செல்லுங்கள்!

குடிமைப்பணித் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுத அனுமதி பெற்றுத் தந்தார் கலைஞர்.

யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகளில் சமூகநீதியைப் பாதிக்கும் சிக்கல்களுக்குத் தீர்வுகாணக் காலம்தோறும் குரலெழுப்பி வருவதும் நாம்தான்.

தமிழ்நாட்டு மாணவர்களின் தேர்ச்சி குறையத் தொடங்குவதை உணர்ந்து, #நான்_முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்தரப் பயிற்சிகள், ஊக்கத்தொகைகள் என நமது திராவிட மாடல் அரசு மேற்கொண்ட சிறப்பு முயற்சிகள் பயனாக நமது மாணவர்களின் தேர்ச்சி எண்ணிக்கை தொடர்ந்து ஏற்றம் காண்பது கண்டு மகிழ்கிறேன்.

தமிழ்நாட்டில் இருந்து இந்த ஆண்டு தேர்வாகியுள்ள 60 பேருக்கும் என் பாராட்டுகள். இந்த எண்ணிக்கை மேலும் உயரும், உயர வைப்பேன், உங்களைப் போல இன்னும் பலரை உயர உயரப் பறக்க வைப்பேன்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.