தமிழக செய்திகள்

ஊரணி காளியம்மன் கோவில் தேரோட்டம்

தாந்தோணி ஊரணி காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தினத்தந்தி

திருவிழா

கரூர் தாந்தோணி கிராமத்தில் ஊரணி காளியம்மன், ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 13-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. கடந்த 20-ந்தேதி ஊரணி காளியம்மன் சாமி ரதமேருதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட டிராக்டரில் ஊரணி காளியம்மன் எழுந்தருளினார்.

தேரோட்டம்

இதையடுத்து தேரோட்டம் கோவில் முன்பு இருந்து தாடங்கி தாந்தோணி குடித்தெரு, கொளந்தாக்கவுண்டனூர், கருப்ப கவுண்டனூர், கணபதிபாளையம், முத்துலாடம்பட்டி, காளியப்பனூர், வெங்கக்கல்பட்டி, மால்நாயக்கன்பட்டி, அருகம்பாளையம் வழியாக தாந்தோன்றிமலை வந்து இரவில் நிறுத்தப்பட்டது.

பின்னர் நேற்று காலை மீண்டும் தேர் தாந்தோன்றிமலையில் இருந்து தொடங்கி நடுத்தெரு, கடைவீதி, குடித்தெரு, ஆதிதிராவிடர் தெரு வழியாக கோவில் நிலையை வந்தடைந்தது. தேர் வந்த ஒவ்வொரு வீதியிலும் கூடி நின்ற பக்தர்கள் அம்மனுக்கு தேங்காய், பழம் வைத்து அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

இரவு காளியம்மன் குடிபுகுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை தாந்தோணி கிராம பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர். திருவிழா அடுத்த மாதம் (ஜூலை) 15-ந்தேதி வரை நடக்கிறது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்