கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட அதிமுக

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் 2ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், பாஜக - அதிமுக கட்சிகளுக்கு இடையே இடப்பங்கீடு குறித்து விவகாரத்தில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில் நகர்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்துப்போட்டியிடும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான 2-ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் சேலம், ஆவடி, திருச்சி, மதுரை, சிவகாசி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சி வார்டுகளில் பேட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள்; பெரியகுளம், தேனி அல்லி, கூடலூர், கம்பம், சின்னமனூர் நகராட்சிகளில் பேட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதேபோல், தேனி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் பேட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் திருவண்ணாமலை, ஈரேடு, நாகை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் உள்ள நகராட்சிகளில் பேட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை