கோப்புப்படம் 
தமிழக செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட தி.மு.க..!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 19-ம் தேதி நடக்க இருக்கிறது. வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கி, வரும் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடை பெற உள்ளது.

தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை இறுதி செய்வதிலும் இட பங்கீட்டை விரைந்து முடிப்பதிலும் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தி.மு.க. சார்பில் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.

இதன்படி, காஞ்சிபுரம், கும்பகோணம், தூத்துக்குடி, திருக்கோவிலூர், விழுப்புரம், கோட்டக்குப்பம், கோவில்பட்டி, மதுராந்தகம் மற்றும் சுவாமிமலை, பாபநாசம், திருப்பனந்தாள், விளாத்திகுளம், அம்மாபேட்டை, விக்கிரவாண்டி, கடம்பூர், வளவனூர், புதூர் பேரூராட்சிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்