சென்னை,
தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அடுத்த மாதம் 3-வது வாரத்தில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த தேர்தலுக்கு மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் கோயம்புத்தூர் மாநகராட்சியின் 47 வார்டுகளுக்கு வேட்பாளர்கள் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான மக்கள் நீதி மய்யத்தின் 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை மநீம தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிட்டுள்ளார். இதில் மதுரை மாநகராட்சியில் 33 வேட்பாளர்களும், சென்னை மாநகராட்சிக்கு 13 வேட்பாளர்களும், ஆவடி மாநகராட்சிக்கு 2 வேட்பாளர்களும், போடி மாநகராட்சிக்கு 3 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.