தமிழக செய்திகள்

கூடுவாஞ்சேரி வேணுகோபால சாமி கோவிலில் உறியடி திருவிழா

கூடுவாஞ்சேரி வேணுகோபால சாமி கோவிலில் உறியடி திருவிழா நடைபெற்றது.

தினத்தந்தி

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி திரவுபதி அம்மன் கோவிலில் உள்ள வேணுகோபால சாமிக்கு கூடுவாஞ்சேரி யாதவர் சமுதாயம் சார்பில் புரட்டாசி மாதம் 3-வது வார சனிக்கிழமையையொட்டி 81-வது ஆண்டு உறியடி திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி வேணுகோபால சாமிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், மகா தீபாராதனை நடைபெற்றது. இரவு மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் வேணுகோபாலசாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் 3 வேளையும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் உறியடி விழாவில் கலந்து கொண்டனர். உறியடி விழாவையொட்டி கோலாட்டம், மயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கூடுவாஞ்சேரி யாதவர் சமுதாயம் மற்றும் விழா குழுவினர், கிராம மக்கள் செய்து இருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது