ரவுடிகள், அரசியல் செல்வாக்கு உடையவர்கள் கந்துவட்டி பிரச்சனைக்கு முக்கிய காரணம் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனிக்குழு மற்றும் பொதுநபர்களை கொண்டு விழிப்புணர்வு குழுவையும் ஏற்படுத்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனு உயர் நீதிமன்ற கிளை முன் இன்று விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம் கந்து வட்டி புகாரை விசாரிக்க தனிக்குழு அமைப்பது பற்றி தலைமை செயலர் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளது.
டிசம்பர் 4ந்தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய டி.ஜி.பி., நிதி துறை செயலருக்கும் ஆணை பிறப்பித்துள்ளது.