காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு புதைப்பொருட்கள், சிலைகள், கல்வெட்டுகள் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அதைத் தொடர்ந்து காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பழங்கால கல்திட்டுக்கள் இருப்பது கண்டுபிடுக்கப்பட்டது.
இந்த கல்திட்டுக்கள் அனைத்தும் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது என்றும் கூறப்படுகிறது. இவை குறித்து முழுமையான ஆய்வு நடத்தினால் மேலும் பல வரலாற்று தகவல்கள் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே உத்திரமேரூர் பகுதியில் அருங்காட்சியகம் ஒன்றை அமைத்து வரலாற்றுச் சின்னங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.