சென்னை,
தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
அழிந்து போகும் நிலையில் இருந்த மூன்றாயிரத்திற்கும் மேற்பட்ட ஓலைச்சுவடிகளையும் எண்ணற்ற கையெழுத்து பிரதிகளையும் மீட்டு, நூல் வடிவில் வெளியிட்டு, பண்டைத் தமிழ் இலக்கியங்களை உயிர்ப்பித்த தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாதர் அவர்கள் பிறந்த தினம் இன்று.
தமிழின் தொன்மையையும், செழுமையையும், மரபையும் அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்கிய அவரின் அர்ப்பணிப்பு ஒப்பற்றது. தமிழ் மொழியின் காவலரான மாமனிதர் உ.வே.சாமிநாதர் அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்.என தெரிவித்துள்ளார்.