தமிழக செய்திகள்

ரேசன் கடைகளில் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் - தமிழக அரசு அறிவிப்பு

ரேசன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

ரேசன் கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையில் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம் கூட்டுறவு ரேசன் கடைகளுக்கான 4 ஆயிரம் விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரிபார்ப்புப் பணிகளுக்கு அதிக அளவில் அலுவலர்கள் தேவைப்படுவார்கள் என்பதால் வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினரை பயன்படுத்திக் கொள்ள சம்பந்தப்பட்ட துறைகளின் மாவட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விற்பனையாளர் பணியிடங்களுக்கு 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும், கட்டுநர் பணியிடங்களுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. விற்பனையாளர், கட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் தகுந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும், ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை