தமிழக செய்திகள்

மாரண்டஅள்ளி அரசு மகளிர் பள்ளியில்வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம்

தினத்தந்தி

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் வெறிநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் நடந்தது. பேரூராட்சி தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். மண்டல இணை இயக்குனர் டாக்டர் சுவாமிநாதன், உதவி இயக்குனர்கள் மணிமாறன், சண்முகசுந்தரம், கால்நடை உதவி டாக்டர் கார்த்திகேயன், டாக்டர் தியாகசீலன், முத்து, கால்நடை பராமரிப்பு உதவியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு வெறிநோய் பரவும் முறை மற்றும் அதனை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆலோசனை வழங்கினர். இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோவிந்தம்மாள், மாரண்டஅள்ளி பேரூராட்சி முன்னாள் தலைவர் ராஜகுமாரி மணிவண்ணன், ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து