தமிழக செய்திகள்

போக்சோவில் வாலிபர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் மாதையன். இவருடைய மகன் ஆனந்த்குமார் (வயது 21). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த 14 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த சிறுமி 9-ம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு வீட்டில் இருந்துள்ளாள். இவர்களின் பழக்கம் குறித்து தகவல் தெரிந்து பெற்றோர் கண்டித்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி சிறுமி திடீரென காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் அவள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 17-ந் ததி சிறுமி அழுது கொண்டு வீட்டிற்கு வந்துள்ளார். விசாரணையில் அதே ஊரை சேர்ந்த ஆனந்த்குமார் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பலாத்காரம் செய்து விட்டதாகவும், 15-ந் தேதி சமந்த கோட்டை கிராமத்தில் உள்ள லட்சுமம்மா கோவிலில் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டியதாகவும் கண்ணீர் மல்க பெற்றோரிடம் சிறுமி கூறினாள். இது குறித்து சிறுமியின் பெற்றோர் தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் ஆனந்தகுமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பூர்ணம் வழக்குப்பதிவு சய்து அவரை கைது செய்தார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது