தமிழக செய்திகள்

ரெயிலில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

தர்மபுரி அருகே ரெயிலில் பயணியிடம் செல்போன் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

தர்மபுரி:

திண்டுக்கல்லை சேர்ந்தவர் ஈஸ்வர் ராம் (வயது 31). இவர் தூத்துக்குடி- மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் தனது மனைவியுடன் பெங்களூருவுக்கு புறப்பட்டார். இந்த ரெயில் நேற்று முன்தினம் அதிகாலையில் சேலம்- தர்மபுரி இடையே வந்து கொண்டிருந்தது. அப்போது ஈஸ்வர் ராமிடம் இருந்த செல்போனை ஒருவர் பறித்து கொண்டு ஓட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டார். இதையடுத்து ரெயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 போலீசார் அந்த நபரை விரட்டி பிடித்து தர்மபுரி ரெயில் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்த ரோகித் (30) என தெரியவந்தது. இதுதொடர்பாக தர்மபுரி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து ரோகித்தை கைது செய்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது