தமிழக செய்திகள்

காரைக்காலில் சுவர் ஏறி குதித்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்துமீறல் வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

காரைக்காலில் சுவர் ஏறி குதித்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்து மீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

காரைக்கால்

காரைக்காலில் சுவர் ஏறி குதித்து வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் அத்து மீறிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தனியாக இருந்த சிறுமி

காரைக்கால் பிள்ளை தெரு வாசல் மெயின் சாலையில் வசிப்பவர் சேகர். இவரது மகன் வெங்கடேஷ் (வயது25). இவர் தனியார் கப்பல் துறைமுகத்தில் கூலியாக வேலை செய்து வருகிறார்.

பிள்ளை தெரு வாசல் பகுதியில் உள்ள கலைஞர் நகரில், 17 வயது சிறுமி பெற்றோர் வேலைக்கு சென்று விட்ட நிலையில் வீட்டு காம்பவுண்டு சுவரில் உள்ள கேட்டை பூட்டிவிட்டு உள்ளே இருந்துள்ளார்.

இதை அறிந்த வெங்கடேஷ், வீட்டு காம்பவுண்டு சுவரில் ஏறி குதித்து, உள்ளே சென்று, உனக்கு நான் மாமன் முறை. எனவே நான் செய்வதை யாரிடமும் சொல்லாதே, என கையை பிடித்துள்ளார்.

அப்போது அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனே அந்த சிறுமியின் வாயை வெங்கடேஷ் மூடி அத்துமீறி நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிறையில் அடைப்பு

தொடர்ந்து சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததால், வெங்கடேஷ் மீண்டும் சுவர் ஏறி குதித்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காரைக்கால் நகர போலீசில் புகார் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, காரைக்கால் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி 15 நாள் காவலில் வைக்க உத்தர விட்டதை அடுத்து வெங்க டேஷ் புதுச்சேரி கிளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அடைக்கப்பட்டார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்