தமிழக செய்திகள்

வள்ளியூர் யூனியன் கூட்டம்

வள்ளியூர் யூனியன் கூட்டம் அதன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமையில் நடந்தது.

தினத்தந்தி

வள்ளியூர் (வடக்கு):

வள்ளியூர் யூனியன் கூட்டம் கூட்டரங்கில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு யூனியன் தலைவர் சேவியர் செல்வராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் வெங்கடேஷ் தன்ராஜ் முன்னிலை வகித்தார். ஆணையாளர் மங்கையர்க்கரசி வரவேற்றார். கூட்டத்தில் வரவு-செலவு கணக்குகள் வாசிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது. மேலும் வள்ளியூர் யூனியன் வார்டு பகுதிகளில் நடைபெற்று வரும் மக்கள் நலப்பணிகளின் நிலை குறித்தும், நிறைவேற்றப்பட வேண்டிய மக்கள் நலப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் யூனியன் பொறியாளர்கள் கணபதிராமன், ரமேஷ் மற்றும் யூனியன் கவுன்சிலர்கள், யூனியன் பணி மேற்பார்வையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர்ராம் நன்றி கூறினார். 

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்