தமிழக செய்திகள்

மதுரை அருகே குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து - 2 பேர் பலி

குற்றாலத்திற்கு சுற்றுலா சென்ற வேன் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தினத்தந்தி

மதுரை,

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை சேர்ந்த 18 பேர் வேன் மூலம் குற்றாலத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், மதுரை ஐகோர்ட்டு கிளை அருகே வேன் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்று கொண்டிருந்த தண்ணீர் லாரி மீது மோதியது. இதில் வேனின் முன்பகுதி முழுவதும் சேதம் அடைந்தது.

இந்த விபத்தில் சிக்கி டிரைவர் உள்ளிட்ட இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்கப்பட்டு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மதுரை ஒத்தக்கடை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தண்ணீர் லாரியை நடு ரேட்டில் நிறுத்தி வைத்த லாரி டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த விபத்து காரணமாக மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்