தமிழக செய்திகள்

விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை:

கண்டன ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்-டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், அந்த விலை உயர்வை திரும்ப பெறக்கோரியும் மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு நற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் துரைராஜ் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் இடும்பையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலாளர் வக்கீல் வேலு குணவேந்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், நகர செயலாளர் துரைக்கண்ணு, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் லூர்துசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

சீர்காழி

இதேபோல, சீர்காழி பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் நீதிசோழன் தலைமை தாங்கினார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகி குணசேகரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர செயலாளர் இனியதமிழன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குத்தாலம்

குத்தாலம் கடைவீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஜான்டேவிட் முன்னிலை வகித்தார். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஸ்டாலின் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி செயலாளர் கதிர்வளவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொள்ளிடம்

கொள்ளிடம் கடைவீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஜெயசக்திவேல் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கேசவன், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டு பெட்ரோல்-டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கோஷமிட்டனர்.

பொறையாறு

பொறையாறு அருகே ஆயப்பாடியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய துணை செயலாளர் கோபிநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.