தமிழக செய்திகள்

'எதிர்கட்சிகள் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்' - திருமாவளவன்

எதிர்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அழைப்பு விடுத்துள்ளதாக திருமாவளவன் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

பெங்களூருவில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது அவர் கூறியதாவது;-

"காங்கிரஸ் கட்சியின் ஒருங்கிணைப்பில் வரும் 17, 18 ஆகிய தேதிகளில் பா.ஜ.க. எதிர்ப்பு கட்சிகளின் அனைத்துக் கட்சிக் கூட்டம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் பங்கேற்க அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கடிதம் எழுதியுள்ளார். அவரது அழைப்பை ஏற்று எதிர்கட்சிகள் கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும்" என்று திருமாவளவன் தெரிவித்தார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு