தமிழக செய்திகள்

ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் - விவசாயிகள் எதிர்ப்பு

நாகை, புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்க வேதாந்தா நிறுவனம் அளித்துள்ள விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தினத்தந்தி

நாகை,

நாகப்பட்டினம், காரைக்கால், கடலூர், விழுப்புரம், புதுச்சேரி பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க வேத்ந்தா நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டது. இதில் நாகை, காரைக்கால் பகுதிகளில் 137 கிணறுகளும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி பகுதிகளில் 102 கிணறுகளும் அமைக்க அனுமதி கேட்டு மாவட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திற்கு கடந்த 5 ஆம் தேதி வேதாந்தா நிறுவனம் விண்ணப்பம் அளித்துள்ளது.

இந்த விண்ணப்பங்களை நிராகரிக்க வேண்டும் என அப்பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்த பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட்டால் கடலில் மீன்வளமும், விவசாய நிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?