ஆதனக்கோட்டை துணை மின்நிலைய அலுவலகத்தில் வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு, வடை மாலை சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.