தமிழக செய்திகள்

3 கிலோமீட்டர் தொலைவுக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்.. வாகன ஓட்டிகள் அவதி

பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதியதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

தினத்தந்தி

காலாண்டு விடுமுறை முடிந்து இன்று கல்வி நிறுவனங்கள் திறக்கப்படுகின்றன. இதனால், மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நேக்கி படையெடுத்து வருகின்றனர். இதனால் சென்னை புறநகர் பகுதிகளில் கடும் பேக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை நேக்கி செல்லும் ஜிஎஸ்டி சாலையில் 3 கிலேமீட்டர் தெலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தாம்பரம் பேருந்து நிலையம் மற்றும் பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் பயணிகள் கூட்டம் அலைமோதியதுடன், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. நெரிசலைக் குறைக்க கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுமுறை முடிந்து ஆம்னி பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களில் மக்கள் வருகை தந்துள்ளதால், இந்த வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்துள்ளன. இதனால் நெரிசல் மிகுந்த பகுதிகளில் போக்குவரத்து சீரமைப்புப் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு அடுத்த சிங்கபெருமாள் கோவில் பகுதிகளில் சுமார் 2 கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்